இந்தியாவில் புதிதாக 62,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு, இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘கடந்த 24 மணித்தியாலத்தில் 62,258 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,908,910 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 30,386 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,12,95,023 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1,61,240 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள 4,52,647 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.