ஈஸ்டர் வங்கி விடுமுறைக்காக மில்லியன் கணக்கான கார்கள் வீதிகளுக்குச் செல்வதால், வாகன நெரிசல் ஏற்படலாம் என Royal Automobile Club (ஆர்.ஏ.சி) எச்சரித்துள்ளது.
ஆனால், தொற்றுநோய் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதால், முந்தைய ஆண்டுகளை விட குறைவான பயணங்கள் எதிர்பார்க்கப்படுவதாக ஆர்.ஏ.சி கூறியது.
இதனிடையே, விடுமுறை நாட்களில் ரயில் பயணத்தை குறைக்குமாறு பயணிகளை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈஸ்டர் வங்கி விடுமுறை வார இறுதியில் சுமார் 5.6 மில்லியன் மக்கள் பிரித்தானியாவில் கார் மூலம் பயணங்களைத் திட்டமிடுவதாக கருதப்படுகிறது.
ஆர்.ஏ.சி இனால், 1,200 ஓட்டுநர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டில் தரவு எதுவும் சேகரிக்கப்படவில்லை என்றாலும், 2014ஆம் ஆண்டில் நிறுவனம் கணக்கெடுப்பைத் தொடங்கியதிலிருந்து கணிக்கப்பட்ட மிகக் குறைந்த பயணங்கள் இதுவாகும்.