கடும் கட்டுப்பாடுகளுடன் ஹரித்வாரில் கும்பமேளா திருவிழா நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியது.
குறித்த திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும். இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஒரு மாதம் மட்டுமே கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளுடன் திருவிழா நேற்று ஆரம்பமாகியது. இதில் பங்கேற்கும் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது குறித்த சான்றிதழை காண்பித்தால் மாத்திரமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.