ஒஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ ஒஸ்திரியாவில் ஐந்து இலட்சத்து மூவாயிரத்து 729பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 37ஆவது நாடாக விளங்கும் ஒஸ்திரியாவில் இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து 49ஆயிரத்து 592பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை ஒன்பதாயிரத்து 368பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 363பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 36ஆயிரத்து 495பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 531பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.