இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 320 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 128 ஆக பதிவாகியுள்ளது.
தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 532 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 326 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.