பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி, சீனாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை முதன்முதலில் எடுத்துக் கொண்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறார்.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்டதாக அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி மற்றும் அவரது மனைவி சமினா ஆல்வி ஆகியோர் இந்த மாத ஆரம்பத்தில், சினோபார்ம் தடுப்பூசியுடன் தங்கள் கோவிட் -19 ஜாப்களைப் பெற்றதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நான் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொண்டேன்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் கருணை காட்டட்டும்.
1ஆவது தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் 2ஆவது நாளுக்கும் பின்னரே ஆன்டிபாடிகள் உருவாகத் தொடங்குகின்றன.
மேலும் இவ்விடயத்தில் அனைவரும் தயவுசெய்து கவனமாக இருங்கள்” என அவர் ருவிட் செய்துள்ளார்.