கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கையின் செயற்பாடு குறித்து சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்கள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், சுகாதார அமைச்சுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும் என தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் சவாலான காலப்பகுதியில் தாய்-சேய் சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தாய்-சேய் சுகாதார சேவையில் இடம்பெறும் பாதகமான விளைவுகளை தடுக்க இலங்கை மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.