வாக்குச்சாவடிகளை பா.ஜ.கவினர் வலுக்கட்டாயமாக கைப்பற்றி, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கி வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
அலிபூர்துவார் மாவட்டத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ காணாகுல் தொகுதி வேட்பாளர் தாக்கப்பட்டுள்ளார். இதேபோல் மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது ஏராளமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
திரிணாமூல் வேட்பாளர் வாக்குச்சாவடிக்குகள் நுழைய பாதுகாப்பு தரப்பினர் அனுமதிக்கவில்லை.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை) காலை முதல் சுமார் 100 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளன.
வாக்குப்பதிவு மையங்களை பா.ஜ.க கைப்பற்றி வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கூடாது என பாதுகாப்பு படையினருக்கு டெல்லியில் இருந்து பா.ஜ.க மேலிடம் உத்தரவிட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.