கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ராய் லட்சுமி தொடர்ச்சியாக பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவருடைய திருமணம் குறித்த பல்வேறு வதந்திகள் அவ்வவ்போது வந்துகொண்டிருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை ராய் லட்சுமி ஒரு பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. அவர் இட்டுள்ள பதிவில், ‘ நீண்ட நாட்களாகப் பல பேர் இரதுகுறித்துக் கேட்டு வருவதால் இதைப் பற்றி பேச முடிவெடுத்திருக்கிறேன்.
முதலில் நான் எனது உறவுநிலை என்ன என்பதை மறைக்கவில்லை. மேலும் அது அடுத்தவருக்குத் தேவையில்லாத விஷயமும் கூட. அடுத்து எனக்கென ஒரு தனியுரிமை உண்டு. எனது துணையின் நலனையும் நான் பாதுகாக்க வேண்டும்.
ஏப்ரல் 27, 2021 அன்று எங்களுக்கு திருமண நிச்சயம் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ்களை நெருங்கிய நண்பர்களுக்குக் கடந்த வாரம் கொடுத்திருந்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.