சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் செயற்திறன் 50.4 சதவிகிதம் குறைவாக காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவற்றின் செயல்திறன் குறைவாக காணப்படுவதாக தெரிவித்துள்ள நோய் கட்டுப்பாட்டு அதிகாரி, இந்த விடயம் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சீன தடுப்பூசிகள் மிக உயர்ந்த பாதுகாப்பு விகிதங்களைக் கொண்டிருக்கவில்லை என செங்டூவில் சனிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசாங்கம் பல்வேறு நாடுகளுக்கு விநியோகித்துள்ளன.
இதேவேளை 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் பயன்படுத்த எந்தவொரு வெளிநாட்டு தடுப்பூசிகளையும் பெய்ஜிங் இன்னும் அங்கீகரிக்கவில்லை. என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.