இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 175 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 631 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் 316 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்த தொற்று காரணமாக நாட்டில் இதுவரையில், 595 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.