கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் (Remdesivir) ஊசி மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்துவரும் நிலையில், குறித்த மருந்து ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்மாத்திரம் 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு மருத்துவ வசதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்துவதில் ரெம்டெசிவிர் மருந்து நன்கு பயனளிப்பதால் உலகளவில் குறித்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், இதனை பெரும்பாலான நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துவருகின்ற நிலையில் மத்திய அரசு ஏற்றுமதிக்கு தலை விதித்துள்ளது.
மேலும், ரெம்டெசிவிர் மருந்துத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் உள்நாட்டுத் தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் இருப்புத் தொடர்பாக மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.