தமிழகத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஏராளமான மக்கள் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாகவுள்ளனர்.
இந்நிலையில், தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அவ்வவ்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையிலேயே பொது சுகாதாரத்துறை இயக்குனர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ”தடுப்பூசி திருவிழா தமிழகத்தில் 5 ஆயிரம் மையங்களில் நேற்று ஆரம்பமாகியது. தினமும் 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விழா 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
பணியாளர்களுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் நேரடியாக சென்று தடுப்பூசி போடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தடுப்பூசிக்க எந்த தட்டுப்பாடும் இல்லை. 17 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.