அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகருக்கு அருகில் உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
புரூக்ளின் சென்டர் நகரில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், நீதிக் கோரி முழக்கமிட்டனர்.
இதன்போது வாகனங்கள் மீது கற்களை வீசி எறிந்த போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.
இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மினசோட்டா மாகாண ஆளுனர் டிம் வால்ஸ், புரூக்ளின் சென்டர் நகரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அத்துடன் நகரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 வயதான கறுப்பினத்தைச் சேர்ந்த டான்ட் ரைட் என்ற இளைஞரே இவ்வாறு பொலிஸாரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.