அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில் யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் பணியை ஈரான் தொடங்கியுள்ளது.
இந்த முடிவானது, இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு கொடுக்கும் பதிலடி என ஈரான் ஜனாதிபதி ஜனாதிபதி ஹசன் ரௌஹானி கூறியுள்ளார்.
அத்துடன் இஸ்ரேல் செய்தது அணுசக்தி பயங்கரவாதம் எனவும் தாங்கள் செய்வது சட்டத்திற்குட்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
அணு ஆயுதங்ளை உற்பத்தி செய்ய 90 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை என்பதால் அந்த இலக்கை நோக்கி ஈரான் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலம், அதனை ஈரான் முற்றாக மறுத்துள்ளது.
புதிதாக செயற்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் மீது கடந்த ஞாயிற்றுக்கிழழமை நடத்தப்பட்ட தாக்குதலில், தெற்கு ஈரானில் இருக்கும் நடான்ஸ் அணுசக்தி மையத்தில் மின்சார வசதி செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.