தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
சென்சூரியன் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்டன் மார்கிரம் 63 ஓட்டங்களையும் மாலன் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் நவாஸ் 2 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரிடி, ஹசன் அலி மற்றும் பஷீம் அஸ்ரப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 204 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 18 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் சார்பாக, பாபர் அசாம் 122 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் பகர் சமான் ஆட்டமிழக்காது 8 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் லிஸாட் வில்லியம்ஸ் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 15 பவுண்ரிகள் அடங்களாக 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான ரி-20 போட்டி, நாளை சென்சூரியன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.