பெல்ஜியத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெல்ஜியத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து 60ஆயிரத்து 320பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் பெல்ஜியத்தில் இதுவரை ஒன்பது இலட்சத்து 35ஆயிரத்து 316பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 23ஆயிரத்து 603பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்து 713பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 37பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எட்டு இலட்சத்து 51ஆயிரத்து 393பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 947பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.