ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்சிகளில் உள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக தற்போது நீதிமன்ற நடவடிக்கையில் உள்ள ஆறு கட்சிகளின் செயற்பாடுகளே இவ்வாறு நிறுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த கட்சிகளில், தவிசாளர் மற்றும் செயலாளர் போன்ற பதவிகளுக்குப் பலர் முன்னிலையாகியுள்ளதுடன் முரண்படு நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், குறித்த கட்சிகள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, அக்கட்சிகளுக்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் இல்லையென நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.