இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், ‘ இந்தியாவில் இந்த மருந்தை மே மாதம் அளவில் தயாரிக்க உள்ளனர். மாதம் 5 கோடி டோஸ் தயாரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்புடனிக் வி தடுப்பூசி மருந்தை அவசர தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே கோவிஷீல்டு, கொவேக்சின் மருந்துகளுடன் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.