சீனா தயாரிப்பான சினோபார்ம் கொரோனா தடுப்பூசியால் நாட்டு மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமாயின் இதற்கு, கொவிட் தடுப்பூசி குறித்து ஆராயும் குழுவே பொறுப்புக்கூற வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சினோபார்ம் தடுப்பூசியின் வினைத்திறன் இன்னும் ஆய்வு மட்டத்திலேயே உள்ள நிலையில் இலங்கை பிரசைகளுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தே அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த சீனோபார்ம் தடுப்பூசி நாட்டிலுள்ள சீனப் பிரசைகளுக்கு மாத்திரமே வழங்கப்படுமெனக் குறிப்பிடப்பட்ட நிலையில் ஆயிரம் இலங்கையர்களுக்கும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் தடுப்பூசியின் வினைத்திறன் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அதன் உண்மைத் தன்மை தொடர்பாக நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென அவர் உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளார்.