கொரோனா வைரஸ் குறித்த தொடர்ச்சியான கவலைகள் காரணமாக, வேலை மையங்களில் ஊழியர்கள் தற்போது அலுவலகத்திற்கு திரும்புவதைப் பற்றி பாதுகாப்பாக உணரவில்லை என தொழிற்சங்கம் கூறியுள்ளது.
பொது மற்றும் வணிக சேவைகள் (பிசிஎஸ்) தொழிற்சங்கம், 1,299 உறுப்பினர்களை ஆய்வு செய்ததில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதில், ஐந்து தொழிலாளர்களில் மூன்று பேர் திரும்பிச் செல்வது குறித்து பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள்.
கணக்கெடுக்கப்பட்ட ஊழியர்களில் 21 சதவீதத்தினர் மட்டுமே பிரித்தானியாவில் உள்ள வேலை மையங்களில் நேருக்கு நேர் உரிமைகோருபவர் நியமனங்களை கையாள்வதில் பாதுகாப்பாக உணர்ந்தார்கள் என்று உறுதியாகக் கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 12ஆம் திகதி முதல், வேலை மையங்களில், குறிப்பாக 18-24 வயதுக்குட்பட்ட நபர்களின் நேர்காணல்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும்.