ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு குற்றம் சாட்டியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பது கடினம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை உருவாக்குவது அரசாங்கத்தின் கடமை அல்லது பொறுப்பு அல்ல என குறிப்பிட்ட அவர் சட்டமா அதிபரே அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கூறினார்.
அதன்படி பொலிஸார், புலனாய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் பெறப்பட்ட விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.
இருப்பினும், அரசியல் ரீதியாக விடுக்கும் அழுத்தங்களுக்காக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த 10 மூத்த ஆலோசகர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.