இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், அடுத்து வரும் 3 வாரங்கள் எச்சரிக்கையானவை என மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநில செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பொது சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
இதற்காக மருத்துவமனைகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்தல், கட்டுப்பாட்டுப் பகுதிகளை அதிகரித்தல் போன்றவற்றை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அடுத்து வருகின்ற 3 வார காலங்கள் எச்சரிக்கையானவை எனத் தெரிவித்த அவர், மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.