மியன்மாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை கையாள தென்கிழக்காசிய நாடுகள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், மியன்மாரில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மியன்மாரின் தற்போதைய நிலைவரம் குறித்து எதிர்வரும் சனிக்கிழமை இந்தோனேசியாவில் ஆசியான் தலைவர்களின் சிறப்பு உச்சி மாநாடு நடைபெறவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.