கொரோனா தடுப்பூசிகள் கடுமையாக நோய்வாய்ப்படுவதையும், உயிரிழப்பதனையும் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட 600 இற்கும் குறைவான அமெரிக்கர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முழுமையாக கொரோனா தடுப்பூசியினைப் போட்டுக்கொண்ட 84 மில்லியன் பேரில் 0.01 சதவீதமானவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.