இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைவரம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவிக்கையில், ‘ இந்தியாவின் கொரோனா நிலைவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியிறவுத் துறை அமைச்சர் டோனி பிளிங்கனும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தொலைபேசி மூலம் கடந்த திங்கட்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இந்தியா அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி, கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் நாம் ஒன்றிணைந்து தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.