மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒக்சிஜன் கசிவு ஏற்பட்டதன் காரணமாக 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
வேறு மருத்துவமனைகளில் இருந்து ஒக்சிஜன் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் அதற்கு முன்பதாகவே 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக அம்மாநிலத்தின் மாவட்ட ஆட்சியர் சுராஜ் மாந்தரே தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த விடயம் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே கூறியுள்ளார்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே ஆறுதல் கூறியதுடன் 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாகவும் ராஜேஷ் டோபே அறிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை பயன்படுத்தி யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.