ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஈராக்கில் பத்து இலட்சத்து ஆயிரத்து 854பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் ஈராக்கில் இதுவரை மொத்தமாக 15ஆயிரத்து 98பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 696பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 447பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 517பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து எட்டு இலட்சத்து 77ஆயிரத்து 309பேர் பூரண குணமடைந்துள்ளனர்.