சிரிய விமான எதிர்ப்பு ஏவுகணை நாட்டின் தெற்கில் உள்ள டிமோனா நகரில் ஒரு அணுசக்தி நிலையத்திற்கு அருகே வெடித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இரகசியமான டிமோனா அணு உலைக்கு அருகிலுள்ள பகுதியில் இந்த ஏவுகணை தரையிறங்கிய போதும், இந்த சம்பவத்தில் எந்தவிதமான சேதங்களும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதேவேளை, குண்டுவெடிப்பில் அணுசக்தி தளம் பாதிக்கப்படவில்லை என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சிரிய ஏவுகணை இஸ்ரேலிய விமானத்தின் மீது வீசப்பட்டதாகவும் அதன் இலக்கை மீறி டிமோனா பகுதியை அடைந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தவறான சிரிய ஏவுகணை எஸ்.ஏ-5 ஆகும். இது இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் மீது வீசப்பட்ட பலவற்றில் ஒன்றாகும்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் பல ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.