வேல்ஸில் உள்ள பப் மற்றும் உணவகங்கள் ஐந்தரை மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக மே 17ஆம் திகதி முதல் திறக்கப்படுகின்றது.
இதுகுறித்து முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் கூறுகையில், ‘வேல்ஸின் சமீபத்திய முடக்கநிலை தளர்த்தலில் ஒரே நாளில் இருந்து 30பேர் வரை உட்புறத்துக்குள்ளும் 50 வெளிப்புறங்களிலும் சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள்’ என கூறினார்.
உட்புற குழந்தைகளின் செயற்பாடுகளான மென்மையான விளையாட்டு மற்றும் நீச்சல் பாடங்களும் மே 3ஆம் திகதிக்கு முன் கொண்டு வரப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி வகுப்புகள் போன்ற 15 பெரியவர்களின் உட்புற நடவடிக்கைகள் ஒரே நாளில் தொடங்கலாம்.
விருந்தோம்பல் துறை, மதுபான சாலைகள், விடுதிகள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் மே 17ஆம் திகதிக்கு முதல் உட்புறத்துக்குள் திறக்க முடியும்.