இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 54 ஆயிரத்து 531 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 73 இலட்சத்து 6 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 42 இலட்சத்து 96 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 28 இலட்சத்து 14 ஆயிரத்து 544 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேநேரம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 806 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 95 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.