இந்தியாவில் கொரோனா தொற்று குறித்த உண்மை நிலைவரம் மறைக்கப்படுவதாகவும், இறப்புகள் குறைத்து காட்டப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஒக்சிஜன் பற்றாக்குறை மறுக்கப்படுகிறது. இறப்புகள் குறைத்து கூறப்படுகின்றன.
இந்திய அரசுதான் இவை எல்லாவற்றையும் செய்கிறது. அதுவும் அவரது மாயையான தோற்றத்தை காப்பாற்றுவதற்காக’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ரன்தீப் சுர்ஜிவாலாவும் கொரோனா தொற்று குறித்த தரவுகள் மறைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.