கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 983பேர் பாதிக்கப்பட்டதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 78ஆயிரத்து 987பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 965பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 86ஆயிரத்து 230பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 355பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதுவரை பத்து இலட்சத்து 68ஆயிரத்து 792பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.