கொவிஷீல்ட் தடுப்பூசி மருந்து தயாரிப்பு மூலப்பொருட்கள், பரிசோதனைகள், மருத்துவ கிட் சாதனைகளை இந்தயாவிற்கு வழங்க தயாராகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அறிவித்துள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கேக் சல்லிவனுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அதிஜ் தோவல் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொவிட் தொற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக ஜோபைடன் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.