யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை மத்தி கிராம சேவகர் பிரிவில் 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளது.
பருத்தித்துறை பொன்னாலை வீதியில், காங்கேசன்துறை மத்தி் கிராம சேவகர் பிரிவில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக 27 ஆண்டுகளாக இருந்து 2018ஆம் விடுவிக்கப்பட்ட நிலத்திலேயே இவ்வாறு இரவோடு இரவாக இராணுவத்தினர் அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளனர்.
இவ்வாறு அறிவித்தல் பலகை நாட்டியுள்ள காணியானது, இருவருக்கு உரித்தான 8 பரப்புக் காணியென்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்பகுதி விடுவிக்கப்பட்ட பின்னர், காணி உரிமையாளர்கள் காணியை சுத்தம் செய்திருந்தபோதும் அக்காணியில் அவர்கள் மீள் குடியேறாத நிலையில், இராணுவத்தினர் அதனை கையகப்படுத்த முனைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.