உள்நாட்டு விமானப் பயணியரும் கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் பயணிப்பது கட்டாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து, வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணியர் கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றுடன் பயணிப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒடிசா, ராஜஸ்தான், மணிப்பூர், மேற்குவங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் உள்நாட்டு பயணியருக்கும், மருத்துவ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாநிலங்களுக்கு பயணம் செய்வர்கள் 72 மணி நேரத்திற்கு முன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆரின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதனை செய்து சான்றுதழை பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ சான்றிதழை வழங்குபவர்களுக்கு மட்டுமே, விமானத்தில் பயணம் செய்வதற்கான போர்டிங் பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.