பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 64பேர் பாதிக்கப்பட்டதோடு 6பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 44இலட்சத்து ஆறாயிரத்து 946பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 434பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 81ஆயிரத்து 840பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 243பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 41இலட்சத்து 97ஆயிரத்து 672பேர் பூரண குணமடைந்துள்ளனர்.