இந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அச்சம் காரணமாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரிலிருந்து பல முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர்.
இதன்படி டெல்லி கெபிடல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிவந்த இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான அஸ்வின், நடப்பு தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதேபோல றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த அவுஸ்ரேலிய வீரர்களான ஆடம் செம்பா மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.
மேலும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இடம்பிடித்த அவுஸ்ரேலிய வீரரான ஹென்ரிவ் டை தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என உணரும் வீரர்கள் தாராளமாக நாடு திரும்பலாம் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.