இந்தியாவில் கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒக்சிஜன் பற்றாக்குறை நிலைவுகின்ற நிலையில், ஒக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்த தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ‘ ஒக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
இந்த முடிவு தற்காலிகமானதே. தி.மு.க ஆட்சி அமைந்த பிறகும் குறித்த ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது’ எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குறிப்பிடுகையில், தமிழக அரசு ஆலையை தன் பொறுப்பில் எடுத்து ஒக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு தேவையான பொறியாளர்களை, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக அரசின் இந்த முரணான முடிவை ஒவ்வாமையுடன் ஏற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.