சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரும் சீன பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.