திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் மகா ஓயா மற்றும் அம்பாறை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கும் 30 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.