ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒக்சிஜன் தேவை இனி வரும் நாட்களில் அதிகரிக்கும்.
எனவே தமிழகத்தினத் முழு தேவையை நிறைவேற்றிய பின்னர் மீதமுள்ள ஒக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அளித்திடுவதே, சரியான வழிமுறையாகும்.
ஒக்சிஜனை பங்கிடும் பொறுப்பை, மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. எனவே பிரதமர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
குறித்த ஆலையில் உற்பத்தியாகும் ஒக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்க ஏற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு எவ்வகையிலும் அநீதி இழைத்திடக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.