தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று (புதன்கிழமை) இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்தந்த பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலை நீங்கும் வரை பொலிஸ் உத்தியோகத்தர்களை வீட்டிலேயே இருக்குமாறு அவர் கூறியுள்ளார்.
அவர்கள் வேலைக்கு செல்லவில்லை என்பதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு யாரும் நுழையவோ வெளியேறவோ முடியாது என்றும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் நுழைந்து வெளியேற முடியும் என்று அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
யாராவது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விட்டு வெளியேறினால், ஒரு வெளிநாட்டவர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் நுழைந்தால் அது தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டங்களை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் விரைவாக அதிகரித்துள்ளதால் இலங்கையில் பல பகுதிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.