மத்தேகொடயிலுள்ள ஆல்பா தொழிற்சாலையின் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நேரடி தொடர்பினை பேணிய 10பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணிய ஏனையவர்கள் தொடர்பில் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆல்பா தொழிற்சாலையில் சுமார் 300 பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவரும், வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணி இருந்தார்களா என்பது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.