இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் உயிர்வாயுக் கலன்கள், சுவாசக் கருவிகள், மருத்துவப் பொருட்களுக்கு பாரியளவில் தடுப்பாடு நிலவுகின்றது.
இந்தநிலையில் பல்வேறு சர்வதேச நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
அமெரிக்கா
- கொரோனா தடுப்பூசியினை தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் மீதான ஏற்றுமதித் தடை நீக்கப்படுகின்றது.
- கொரோனா தடுப்பூசிகள், கொரோனா தடுப்பூசிகளுக்கான மூலப்பொருட்கள், பரிசோதனைக் கருவிகள், சுவாசக் கருவிகள், மருத்துவக் கருவிகள், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை அனுப்புகிறது.
- நியூயோர்க்கிலிருந்து அனுப்பப்பட்ட 328 உயிர்வாயுக் கலன்கள் புது டில்லி சென்றடைந்துள்ளன.
பிரித்தானியா
- 100 சுவாசக் கருவிகளும், காற்றிலிருந்து உயிர் வாயுவைப் பிரித்தெடுக்கும் 95 கருவிகளையும் முதற்கட்டமாக அனுப்பியுள்ளது.
- 495 குறித்த கருவிகளுடன் வேறு சில மருத்துவப் பொருட்களையும் பிரித்தானியா அனுப்பி வைத்துள்ளது.
பிரான்ஸ்
- உயிர்வாயு உற்பத்தி செய்யக்கூடிய 8 பெரிய கருவிகளை அனுப்பி வைக்கவுள்ளது.
- அயர்லாந்து, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் உயிர்வாயுவைப் பிரித்தெடுக்கும் சாதனங்கள், சுவாசக் கருவிகள் ஆகியவற்றை அனுப்புகின்றன.