கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தனது அமைச்சர்களுடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதன்போது நாட்டின் இக்கட்டான நிலைமை, மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு துரிதமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில், பிரதமர் தலைமையில் நடைபெறும் இரண்டாவது ஆலோசனை கூட்டம் இதுவாகும்.
இதற்கிடையே நேற்று இராணுவ தளபதி நரவனே பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும், நாட்டில் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தற்காலிக மருத்துவ மனைகளை அமைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்து வருதாகவும் நரவனே தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.