நாட்டின் சில பகுதிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தின் ஓர்ஸ் ஹில் மற்றும் அன்புவழிபுரம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
பாணந்துறை தெற்கு பிரதேசத்தின் வடக்கு வேகட, கிரிபேரிய மற்றும் கிழக்கு பாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் நீலதண்டாஹின்ன கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.