தமிழகத்தில் சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெற்றிருந்தது. மேற்கு வங்கத் தேர்தலும் நிறைவு பெற்றதையடுத்து, முன்னர் அறிவித்தபடி ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 75 மையங்கள் தயார்படுத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுகின்றன. கொரோனாத் தொற்றைத் தவிர்க்க சமூக இடைவெளி கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருகின்றன வேட்பாளர்களும் முகவர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பெற்ற ‘நெகட்டிவ்’ சான்றை சமர்ப்பித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டுகின்றனர். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு என தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறிய தொகுதிகளுக்கான வாக்குகளின் எண்ணிக்கை முடிவு பிற்பகல் மூன்று மணியளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய தொகுதிகளில் முடிவுகள் முழுமையாக வெளியாகுவதற்கு நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.