கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி முன்வைத்த யோசனையை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார்.
இலங்கையில் தங்கியிருந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டிய தேவை தமக்குள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்ததாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துளார்.
அத்துடன், ஜனாதிபதியின் யோசனைக்கு சட்டமா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.