தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. குறித்த ஊரடங்கு எதிர்வரும் 24 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வாகனங்கள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நண்பகல் 12 மணிவரை மாத்திரம் மளிகை கடைகள் இயங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிப்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.